கொவிட்-19 வைரஸ் தொற்று இன்னும் நெருக்கடி நிலையில் உள்ளதா என்பது பற்றி தீர்மானிப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் இன்று கூடி ஆராயவுள்ளது. கொவிட் அச்சுறுத்தலை இவ்வருட இறுதிக்குள் முழுமையாக முடிவுக்கு கொண்டுவர இயலும் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெற்றோஸ்; அதனம் கெப்ரியஸ் தெரிவித்துள்ளார். கொவிட்-19 வைரஸ் உலகலாவிய ரீதியில் நெருக்கடி நிலையை தோற்றுவித்திருப்பதாக 2020ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் திகதி உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்திருந்தது. பல நாடுகளும் கொவிட் எச்சரிக்கை நிலையினை தளர்த்தியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் இதுபற்றி இன்று கூடி தீர்மானிக்கவுள்ளது.