Home » கொவிட் தொற்று மீண்டும் அதிகரிக்கும் எச்சரிக்கை – சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு சுகாதார அமைச்சு வேண்டுகோள்

கொவிட் தொற்று மீண்டும் அதிகரிக்கும் எச்சரிக்கை – சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு சுகாதார அமைச்சு வேண்டுகோள்

Source
Share Button

கொவிட் தொற்று மீண்டும் அதிகரித்திருப்பதனால் முகக்கவசம் அணியுமாறு சிபார்சு செய்திருப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சந்திரகுப்தா தெரிவித்துள்ளார். குறித்த சிபார்சு நேற்று முதல் அமுற்படுத்தப்பட்டிருக்கின்றது. கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கொவிட் தடுப்பூசியின் நான்காவது டோசை விரைவாக ஏற்றுவதற்கு சுகாதார அமைச்சுத் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் கூறினார். இதேவேளை, கொவிட் தொற்றாளர்களை இனங்காண்பதற்கான பி.சி.ஆர்.பரிசோதனைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. கொத்தணிகளாக கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படும் பிரதேசங்களில் எழுந்தமாறாக பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மக்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார். பொது இடங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தின் போது முகக்கவசம் அணிவது அவசியமாகும். இதேவேளை, ஏனைய கொவிட் சுகாதார வழிமுறைகளையும் முறையாக கடைப்பிடிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image