Home » கொவிட் நிதியத்தில் உள்ள 1.8 பில்லியன் ரூபா நிதியினை மருந்து கொள்வனவிற்கு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை  

கொவிட் நிதியத்தில் உள்ள 1.8 பில்லியன் ரூபா நிதியினை மருந்து கொள்வனவிற்கு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை  

Source
Share Button

கொவிட் நிதியத்தில் உள்ள 1.8 பில்லியன் ரூபா நிதியினை அத்தியாவசிய மருந்து கொள்வனவிற்காக வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் இதனைக் கூறினார். சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நலன் விரும்பிகளால் இந்த நிதி வழங்கப்பட்டது. கொவிட் தொற்றுநிலை தற்போது கட்டுப்படுத்தப்பட்டிருப்பதனால், அந்த நிதியினை சுகாதார தேவைகளுக்கு பயன்படுத்த முடியும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். வைத்தியசாலைகளுக்குத் தேவையான 234 வகையான மருந்துகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலக வர்த்தக சந்தையில் மருந்துகளின் விலை விரைவாக அதிகரித்துள்ளதனால், உள்ளுர் மருந்து உற்பத்தி நடவடிக்கையின் தேவை அதிகரித்துள்ளது. இதற்குத் தேவையான மூலப் பொருட்களை இந்திய கடனுதவியின் கீழ், பெறுவது பற்றி ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

ஒயாமடுவ மற்றும் ஹொரண மில்லேவ பிரதேசங்களை மையமாகக் கொண்டு மருந்து உற்பத்திகளுக்கு 12 முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளனர். அந்த உற்பத்தி நடவடிக்கைகளை எதிர்வரும் சில மாதங்களுக்குள் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சமுர்த்தி மற்றும் கல்வி அமைச்சு என்பவற்றுடன் இணைந்து ஆரம்பப் பிரிவு பாடசாலை மாணவர்களுக்கும், கர்ப்பிணித் தாய்மாருக்கும் போஷாக்கு உணவினை வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளை திட்டமிட்டுக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி கூறினார். மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களின் இறக்குமதிக்காக நிதி ஒதுக்கீடுகள் கிடைத்துள்ளன. இடைக்கால வரவு செலவுத்திட்டத்திலும் இதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஜனாதிபதி கூறினார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image