கோடிக் கணக்கான ட்விட்டர் கணக்குகள் நீக்கப்படவுள்ளன

ட்விட்டர் சமூக வலைதளத்தில் 150 கோடி ட்விட்டர் கணக்குகள் நீக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டுவிட்டர் சமூக வலைதளத்தை எலான் மஸ்க் கடந்த ஒக்டோபர் மாதம் வாங்கியதைத் தொடர்ந்து, உயர் அதிகாரிகள், நிர்வாக குழு, ட்விட்டர் பயனாளர்களின் கட்டணம் என்பனவற்றில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வருடக்கில் பாவனையில்லாத சுமார் 150 கோடி ட்விட்டர் கணக்குகள் நீக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
