கோட்டே, கொட்டுபெம்ம ஈரநிலப் பூங்கா இன்று பொதுமக்களிடம் கையளிப்பு

உலக நகரங்கள் தினத்தை முன்னிட்டு, கோட்டே, கொட்டுபெம்ம ஈரநிலப் பூங்கா, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் இன்று காலை பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
இந்த ஈரநிலப் பூங்கா உலக வங்கியின் உதவியுடன் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நகர அபிவிருத்தி அதிகாரசபையால் நிர்மாணிக்கப்பட்டது. இதற்காக சுமார் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 25ஆம் திகதி டுபாயில் இடம்பெற்ற ஈரநிலங்கள் தொடர்பான 13ஆவது ரம்சார் மாநாட்டில் கொழும்பு நகரம் ரம்சார் ஈரநிலமாக அறிவிக்கப்பட்டது.
கோட்டே, கொட்டுபெம்ம ஈரநிலப் பூங்காவின் மொத்த பரப்பளவு 14 ஹெக்டயர் ஆகும். இது பெத்தகான, ஈரநில பூங்காவின் தொடர்ச்சியாகும்.
