ந.லோகதயாளன்.
திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை காக்கும் வகையில் 3 முக்கிய தீர்மானங்கள் இன்று யாழில் மேற்கொள்ளப்பட்டது.
திருக்கோணேஸ்வரத்தை ஆக்கிரமிப்பதற்கு எதிராக சைவசமய அமைப்புக்கள் ஒன்றுகூடி ஆராய்ந்தபோதே இந்த 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதன்போது வடக்கு கிழக்கு உறபட அணைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக திருகோணமலை மாவட்டத்தின் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் இருப்பை பாதுகாத்து அதன் நெருக்கடிகளை களைய ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி ஆவண செய்ய வேண்டும்.
திருக்கோணஸ்வர் ஆலயத்தில் இந்தியந் தூநரகத்தின் உதவியுடன் இராஜகோபுரம் அமைத்மு காத்தல் உள்ளிட்ட விடயங்களை உடனடியாக தூதரகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வது.
மூன்றாவதாக திருக்கோணேசசரத்திற்கான யாத்திரையை ஊக்குவிப்பது என்ற மூன்று தீர்மானிக்கப்பட்டது.
இதேநேரம் இந்த கலந்துரையாடலில் உரையாற்றிய கலாநிதி ஆர்.திருமுருகன் தனது உரையில் ,
திருகோணமலைக் கோணேஸ்வரர் ஆலயத்திற்கு இடையூறான வகையில் தொல்லியல் திணைக்களம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளிற்காகவே
திருகோனேஸ்வரத்தை காக்கும் இந்த முயற்சி நல்லை ஆதீண குருமுதல்வர் தலைமையில் இடம்பெறுகின்றது.
திருகோணமலைக்கு என்ன பதில் என நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபையின் கீழே அமர்ந்து குரல் எழுப்புவதனைத் தவிர இன்று வேறு மார்க்கம் இல்லை.இதுவே திருக்கேதீஸ்வரத்திலும் இடம்பெற்றது. அதன்போது அந்த மாவட்ட மக்கள் பிரதிநிதிகள்கூட வாய் திறக்கவில்லை. இது மதம் அன்றி இனம் சார்ந்த அழிவிறகும் இட்டுச் செல்லப்போகின்றது. திருக்கோணேஸ்வரச் செய்தி மூலம் திருமலையை அபகரிக்க எடுத்த சதிகள் அம்பலமாகியுள்ளது.
நாம் எல்லாவற்றையும் ஜெனிவாவிற்கு கொண்டு போகின்றோம் என்பதும் யதார்த்தத்திற்கு பொருத்தம் அற்றது. அதேநேரம் தொல்லியல் திணைக்களத்தின் அநியாயமும் சொல்லி மாளாத அளவிற்கு உள்ளது. என்றார்.
கோணேச்சர ஆலய நிர்வாகத்தின் உப செயலாளர் அருண் உரையாற்றுகையில்,
ஆலயத்திற்கு 1971-01-20 ஆம் திகதி வரைபடத்தின் பிரகாரம் தொல்லியல் திணைக்களமே வர்த்தகமாணியில் 18 ஏக்கர் உண்டு எனவும் அதேபோன்று தீர்த்தக் கேணியில் 3,1/4 ஏக்கர் உண்டு என்றும் 2009 ஆம் ஆண்டின் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றும் 12 அடி அகல கோட்டை வாசல் ஊடாக பாதுகாப்பு படையின் அனுமதி பெற்றே ஆலயத்திற்கு செல்ல முடியும்.
2019ஆம் ஆண்டு 6ஆம் மாதம் மாதாந்த கூட்டத்தின் மாவட்டச் செயலக தீர்மானத்தின் அடிப்படையில் ஆலய சூழலில் உள்ள கடைகள் 56 கடைகளும் வேறு இடத்திற்கு மாற்ற நிதி இன்மை காரணம் காட்டப்பட்டது. அதேநேரம் புதிய கோபுரம் அமைக்கவும் தீர்மானித்தோம் என்றார்.
ஆலயத்தில் அணமையில் இடம்பெற்ற கும்பாபிசேகத்தின் பிரதம குரு மகாலிங்கசிவ குருக்கள் உரையாற்றுகையில்,
கும்பாபிசேக காலத்தில் ஒரு பக்கேற் சீமேந்து கொண்டு செல்வதானால்கூட இராணுவ அனுமதி பெற வேண்டும். இது நாண் கண்ணால் கண்ட செய்தி. எந்தப் பொருளிற்கும் விளக்கம் வேண்டும் அதற்கு அவர்களிற்கு திருப்தி இருந்தால் மட்டுமே அனுமதி கிடைக்கும். பாடல்பெற்ற தலத்தின் இன்றைய நிலையிது. பழம்பெரும் பொக்கிசத்தின் அவலம் இது என்றார்.
இதன்போது சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் உரையாற்றுகையில்,
திருகோணேஸ்வரத்திற்காக பாடுபட்ட ஒரே அரசியல்வாதியென்றால. அது திருச்செல்வம்தான்.
இந்த மன்னிற்கு
பாமர் மசூதியை இடிந்து அயோத்தியை கட்டியவரை கூட்டிவர என்னால் முடியும்.
கோணேச்சர இருப்பிற்கு நாம் நான்கு வழிகளில் மெயல வேண்டும். நல்லூர் இன்று திகழ அன்று வழி ஏற்படுத்திய மாப்பான முதலியார் கொடி பிடித்து போராடவில்லை பேசியே அதனைச் சாதித்தார்.
எந்தக் கத்தோலிக்கன் திருக்கேதீஸ்வரத்தை உடைத்தானோ அதே கத்தோலிக்கன் 2019 ஆம் ஆண்டு வளைவை உடைத்தான் நாம் பார்த்துக்கொண்டு இருந்தோம். அங்காளே புத்தன் திருக்கேதீஸ்வரத்தை உடைக்க வேண்டும் என பார்த்துக்கொண்டு இருக்கின்றான். காளி கோவிலை உடைத்தேன் என கிஸ்புல்லா கூற பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்.
இவற்றைவிட வேறு வழிதான் டில்லியின் உதவியை பெறுவது டில்லி இந்து என்றால் உதவும் தமிழ் என்றால் அவர்கள் உதவ முன்வர மாட்டார்கள் ஆனால் இந்து என்றார் 100 கோடி இந்துக்கள் உள்ளனர். இந்த விடயத்திலும் 100 கோடி இந்துக்களின் உதவியை பெற முடியும். தமிழ் என்றால் பிரிவினை கோரும் புலிகள் அல்லது ராஜீவ் காந்தியை கொன்ற புலிகள் என்றேஅவர்கள் எண்ணுகின்றனர்.
தமிழ் மக்கள் என்ற சொல்லை கைவிட்டாலே இதனைச் சாதிக்கலாம். ஏனெனில் தமிழ் என்று சென்றால் தமிழிற்கும் பெளத்தத்திற்கும் மோதலை ஏற்படுத்தும் ஓர் குழு உள்ளது. நீங்கள் ஓம. என்றால் இதற்காக டில்லியில் ஓர் போராட்டத்தையே என்னால் ஏற்பாடு செய்ய முடியும். டில்லியில் பல நூறு இந்துக்கள் என்னுடன் நட்பில் உள்ளனர் என்றார்.
இதன்போது பதிலளித்து உரையாற்றிய நல்லை ஆதீண குருமுதல்வர் பேசுவதற்கு அவர்கள் அன்பாக பேசுவதில்லையே எவ்வாறு பேசுவது என கேள்வி எழுப்பினார்.
TL





