Home » கோண்டாவிலில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைக்க யோசனை

கோண்டாவிலில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைக்க யோசனை

Source

மாநகர சபைக்குச் சொந்தமான கோண்டாவிலில் உள்ள நீர் விநியோக கிணறு அமைந்துள்ள காணியில் சர்வதேச துடுப்பாட்டு மையம் அமைப்பது தொடர்பில் ஆலோசனை முன்வைக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலைமயில் இடம்பெற்றபோதே இது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி வடக்கு மாகாண இளைஞர்களிற்கே வரப்பிரசாதமாக அமையக் கூடியதாக ஓர் சர்வதேச தரத்திலான துடுப்பாட்ட மைதானம். அமைக்க துடுப்பாட்ட சபை இணக்கம் தெரிவிக்கின்றபோதும் அதற்கு பொருத்தமான நிலம் இல்லை எனத் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய ஆராய்ந்தபோது கோண்டாவிலில் உள்ள மாநகர சபைக்கு உரித்தான குடிநீர் வழங்கல் நிலையம் அமைந்துள்ள 11 ஏக்கர் நிலம் பொருத்தமாக அமையலாம் எனக் கருதப்படுகின்றது எனவே இந்த சபை அதனை அனுமதித்தால் சாத்தியக் கூற்றுகள் தொடர்பில் ஆராயலாம்.

ஏனெனில் மனடைதீவில் 40 ஏக்கர் வழங்க இணங்கியபோதும் அவர்களால் 100 ஏக்கர் கோரப்பட்டதோடு அந்த மண்டில் விளையாட்டரங்கு ஏற்படுத்த மண்ணை பதப்படுத்தவே அதிக பணம் செலவு ஏற்படும் என்கின்றனர். இதனால் தீவகத்தில் விளையாட்டரங்கு வருவதற்கு சந்தர்ப்பம் இல்லை இதேநேரம் இதன் காரணமாக கை நழுவி போகலாம் அதேநேரம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் எங்கேனும் ஒரு நிலம் கிடைக்கும் அங்கு இந்த விளையாட்டு அரங்கு மாற்றப்பட்டால் வடக்கில் அதிக துடுப்பாட்ட இளைஞர்களைக்கொண்ட யாழ்ப்பாணம்  மக்களிற்கு நாம் செய்யும் துரோகம் என்றார்.

இது தொடர்பில் ந.லோகதயாளன் கருத்துரைக்கையில்,

கோண்டாவில் பகுதியில் பரப்பு 50 லட்சத்தை தொட்டு நிற்கும் சூழலில் வளம் மிக்க மண்ணை இவ்வாறான பயன்பாட்டிற்கு மாற்றும்போது  அப் பகுதியே வர்த்தக நோக்கம் கொண்டதாக மாறும். அதனை அப்பகுதி மக்கள் விரும்புகின்றனரா எனபதனை அறிய வேண்டும். விவசாயத் தன்மை கொண்ட நிலத்தின்  தன்மை தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

இதேநேரம் தீவகப் பகுதியில் இவ்வாறான விளையாட்டரங்கு ஒன்று வருமானால் அப்பகுதி அபிவிருத்தி அடையும் என காத்திருக்கும்  மக்களிற்கு நாம் கூறும. பதில் என்ன. வெறுமனே வைத்தியசாலைகளின் மருத்துவக் கழிவுகளை எரியூட்டி போன்றவற்றை அமைத்து நகரின் நரகத்தை அகற்றும் பகுதியாக மாற்றாதீர்கள் என ஏற்கனவே அவர்கள் தெரிவித்துள்ளனர். இவை அனைத்திலும் கவனம் செலுத்துவதற்கு அப்பால் இவ்வாறு சர்வதேச விளையாட்டு அரங்கு வந்தபின் அது மத்திய அரசிற்குதான் சொந்தம் அல்லது அதனை மாநகர சபையால் பராமரிக்கும் வல்லமை இல்லை என தற்போது கலாச்சார மண்டபத்திற்கு கூறுவதுபோன்று கூற மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் எனவே இந்த விடயத்தில் தீர்மானத்தை இன்றைய கூட்டத்தில் எட்ட முடியாது அடுத்த கூட்டத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என்றார்.

இலங்கையின் துடுப்பாட்ட சபையில் இனி இல்லை என்ற அளவு இனவாதம் உள்ளது.  அதனால் எந்த வகையிலும் யாழ்ப்பாணத்தில் சர்வதேச விளையாட்டு மைதானம் வருவதனை விரும்ப மாட்டார்கள் அதனை மீறி அமைப்பது நல்ல விடயம் இதேநேரம் எமது ஆட்சிக் காலத்தில் ஒரு மைதானம் அமைக்க முற்பட்டபோது எம்மால் மறுக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது என உறுப்பினர் இரா.செலவ்வடிவேல் தெரிவித்தார்.

இவ்வாறான பல கருத்துக்கள் இருக்கும்போது அது தொடர்பில் ஆராய சிறிது கால அவகாசம் தேவையாகவுள்ளதனால் இதனை அடுத்த கூட்டத்திற்கு ஒத்தி வைப்பதே உகந்த விடயம் என உறுப்பினர் மு.ரெமீடியஸ் தனது கருத்தில் தெரிவித்தார்.

இவற்றையடுத்து இந்த விடயத்தை அடுத்த கூட்டத்திற்கு ஒத்தி வைப்பதாக மாநகர முதல்வர் தெரிவித்தார்.

TL

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image