Home » கோதுமை மாவின் விலை மேலும் 25 ரூபாவினால் குறைப்பு

கோதுமை மாவின் விலை மேலும் 25 ரூபாவினால் குறைப்பு

Source

கோதுமை மாவின் விலை மேலும் 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி ரூ.290 ஆக இருந்த ஒரு கிலோ கோதுமை மாவின் புதிய விலை ரூ.265 ஆக இருக்கும்.

கடந்த வெள்ளிக்கிழமை ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 85 ரூபாவால் குறைக்கப்பட்டதுடன், அதன்படி ஒரு வாரத்தில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 110 ரூபாவினால் குறைந்துள்ளது.

எனினும், சில கடைகள் இன்னமும் மக்களுக்கு நிவாரணம் வழங்காமல் பழைய விலைக்கே கோதுமை மாவை விற்பனை செய்வதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

N.S

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image