சட்டவிரோதமான முறையில் பிரான்ஸூக்கு செல்ல முற்பட்ட 47 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் பிரான்ஸூக்கு செல்ல முற்பட்ட 47 பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஆறு பெண்களும், நான்கு சிறுவர்களும் அடங்குவர். வென்னப்புவ கொளிஞ்சாடிய பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினர் இவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் சிலாபம், மாரவில, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
