நீதி அமைச்சின் கீழ் இயங்கும் சட்ட உதவி ஆணைக்குழு கடந்த பத்து ஆண்டுகளில் 99 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு சட்ட உதவிகளை வழங்கியுள்ளது. அநாதரவான, குறைந்த வருமானம் பெறும் நபர்களுக்கு நீதிமன்றத்தின் உதவியை நாடத் தேவையான வசதிகளை சட்ட உதவி ஆணைக்குழு வழங்கி வருவதாக அதன் பிரதிப் பணிப்பாளர் கௌஷல்யா ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார். குற்றம், பராமரிப்பு, விவாகரத்து, காணி உட்பட பல்வேறு வழக்குகளுக்கான உதவிகளை சட்ட உதவி ஆணைக்குழுவிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.