Home » சட்ட ரீதியாக நாட்டிற்கு பணம் அனுப்பும் புலம்பெயர் ஊழியர்களுக்கு மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி

சட்ட ரீதியாக நாட்டிற்கு பணம் அனுப்பும் புலம்பெயர் ஊழியர்களுக்கு மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி

Source
Share Button

சட்ட ரீதியாக நாட்டிற்கு பணம் அனுப்பும் புலம்பெயர் ஊழியர்களுக்கு அவர்கள் அனுப்பும் பணத்தின் அளவிற்கு ஏற்ப மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இதற்கான பிரேரணை அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியாக வங்கி முறையின் ஊடாக பணம் அனுப்பும் பணியாளர்களுக்கு மாத்திரம் இந்தச் சிறப்புரிமை உரித்தாகும். புலம்பெயர் ஊழியர்களுக்குக் குறைந்த வட்டியில் வீட்டுக் கடனை வழங்கும் வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரச மற்றும் தனியார் வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். கடந்த மாதம் நாட்டில் வெளிநாட்டு செலாவணியின் அளவு அதிகரித்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image