சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் அடுத்த சில நாட்களில் மீண்டும் ஆரம்பம்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் எதிர்வரும் சில தினங்களில் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வர்த்தக முகாமைத்துவ மற்றும் சுத்திகரிப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மசகு எண்ணெய் இறக்குமதி செய்யும் திட்டம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
