சமயத்தலங்களின் மின்கட்டண பிரச்சினை பற்றி நாளை விசேட பேச்சுவார்த்தை

சமய தலங்களின் மின்சார பிரச்சினை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்காக, மின்சக்தி அமைச்சருடன் நாளை விசேட பேச்சவர்த்தை நடத்தவுள்ளதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த மின்சார பிரச்சினையினை தீர்ப்பதற்கு மாற்று வேலைத்திட்டம் அவசியமாகும். இதன்படி சகல சமயத் தலங்களுக்கும் அடுத்த வருடத்தில் சூரிய சக்தி மின்கட்டமைப்பை ஏற்படுத்தவுள்ளதாக அமைச்சர் கூறினார்.
