சமூக நலப் பலன்களை எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் வழங்குவதற்கான அவசர வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சமூக நலப் பலன்கள் சபை தெரிவித்துள்ளது. தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் கணக்;கின்படி, ஆறு பிரிவுகளின் கீழ், இதற்கான தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த வேலைத்திட்டம் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக சபையின் தலைவர் பி.விஜயரத்ன தெரிவித்துள்ளார். இதற்காக 37 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளின் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.