சம்பளம் இன்றி, கடமைகளை தொடர்வதற்கு அமைச்சர்கள் தீர்மானம்

அமைச்சர்கள் எந்தவித சம்பளமும் இன்றி, எதிர்வரும் ஒரு வருட காலத்திற்கு பணியாற்றத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பிரதமர் சமர்ப்பித்த இது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில அவர் கருத்துத் தெரிவித்தார்.
நாட்டின் பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு, எரிபொருட்களின் விலையேற்றம் பிரதான காரணமாகும். நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானமான 12 பில்லியன் அமெரிக்க டொலர்களில் ஆறு பில்லியன் டொலர்கள் எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படுகிறது என்று அமைச்சர் கூறினார்.
இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணத்திற்கான பொறுப்பை அமைச்சரவை ஏற்றுக் கொள்வதாகவும், இதனால், சட்ட ரீதியான வழிமுறைகளை மாத்திரம் பயன்படுத்தி நாட்டிற்கு பணம் அனுப்புமாறும் அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
