Home » சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்க முடியாத பட்சத்தில், பல கட்சிகளை கொண்ட அரசாங்கத்தை அமைப்பதே சிறந்தது என அஸ்கிரி பீடம் சுட்டிக்காட்டியுள்ளது     

சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்க முடியாத பட்சத்தில், பல கட்சிகளை கொண்ட அரசாங்கத்தை அமைப்பதே சிறந்தது என அஸ்கிரி பீடம் சுட்டிக்காட்டியுள்ளது     

Source
Share Button

  

சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்க முடியாத பட்சத்தில், பல கட்சிகளை கொண்ட அரசாங்கத்தை அமைப்பதே சிறந்தது என அஸ்கிரி பீடத்தின் மஹாநாயக்கர் வரக்காகொட ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமையின்படி, குறுகிய காலத்தில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க முடியும் என்று நம்ப முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று பிற்பகல் மஹாநாயக்கரை சந்தித்த போது இந்த விடயத்தை தெரிவித்தார். நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற கொள்கையின்படி, அனைவரும் செயற்பட்டால், ஒன்றுபடுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக அவர் தெரிவித்தார். இருப்பினும், கட்சி தொடர்பில் சிந்தித்தால், இதனை எதிர்பார்க்க முடியாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மல்வத்து பீடத்தின் மஹாநாயக்கர் ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரிடமும் பிரதமர் ஆசி பெற்றார்.  

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image