சர்வகட்சி வேலைத்திட்டத்தை அமைப்பது தொடர்பிலான கலந்துரையாடலின் முழுமையான அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

சர்வகட்சி வேலைத்திட்டத்தை அமைப்பது தொடர்பிலான கலந்துரையாடலின் முழுமையான அறிக்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்ததாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதன்போது, கலந்;து கொண்ட அமைச்சர், நாட்டை கட்டியெழுப்புவதற்கான பொதுவான வேலைத்திட்டமொன்று எதிர்வரும் சில தினங்களில் தயாரிக்கப்படும் என தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையின் பட்டய ஊடக வல்லுநர்கள் நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கு, உரிய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
சர்வதேச தரத்திற்கு அமைய, செயற்படும் இந்த நிறுவனத்தின் ஊடாக தொழில்முறை ஊடகவியலாளர்களை உருவாக்கவும், ஊடக பாரம்பரியத்தை நாட்டில் உருவாக்கவும் முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
