சர்வகட்சி வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு

சர்வகட்சி வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது. எதிர்க்கட்சியித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று சந்தித்த போது, இதனைக் குறிப்பிட்டுள்ளார். எனினும், சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்க தமது கட்சி ஒருபோதும் தயாரில்லை என அவர் தெரிவித்ததாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பல விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். இந்த சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இதேவேளை, கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருந்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, ஒரு புதிய கூட்டணி உருவாக்கப்படும் என, குறிப்பிட்டுள்ளார். இதில் எட்டுக் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் உள்ளடங்குவார்கள். எதிர்காலத்தில் மேலும் பல கட்சிகள் இதில் இணைந்து கொள்ளும் என, அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
