சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அனுமதியினை பெறுவது அரசாங்கத்தின் பிரதான விடயம் என்று நிதித்துறை ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதனூடாக பொருளாதார ஸ்திரத்தன்மையினை விரைவில் ஏற்படுத்துவது நோக்கம் என்று அவர் கூறினார். நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களினால் நீண்டகால பலாபலன் கிடைக்கும் என்றும் ராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.