சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி குழு அடுத்தவாரம் இலங்கைக்கு விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு எதிர்வரும் வாரத்தில் இலங்கைக்கு வருகை தரவுள்ளது. பொருளாதாரம், நிதி மறுசீரமைப்பு மற்றும் கொள்கைத்திட்டம் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் குறித்த குழு பேச்சவார்த்தை நடத்தவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 24ஆம் திகதியிலிருந்து 31ஆம் திகதி வரையான காலப் பிரிவில் இலங்கைக்கு வருகை தருவதற்கு திட்டமிட்டுள்ளது.
