சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி இந்த வருட நிறைவு பகுதியில் இலங்கைக்கு கிடைக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் கடன்வசதி இந்த வருட நிறைவு பகுதியில் இலங்கைக்கும் கிடைக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான பேச்சுவார்த்தை தற்போது இடம்பெற்று வருகிறது. வெளிக்கடன் உரிமையாளர்கள் இலங்கை அரசின் கடன் முகாமைத்துவ மூலோபாயத்திற்கு இணங்கும் பட்சத்தில் எதிர்வரும் சில மாதங்களுக்குள் கடனை பெற்றுக்கொள்ளலாம் என, அவர் குறிப்பிட்டார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் 300 கோடி டொலர் கடன் வசதியை எதிர்பார்ப்பதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.
