சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது. இலங்கைக்குத் தேவையான 300 கோடி அமெரிக்க டொலர்களை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கோடு இந்த பேச்சுவார்;த்தை நடைபெறவிருக்கிறது. இந்தக் கடன் உதவி இவ்வருட இறுதிக்குள் இலங்கைக்குக் கிடைக்குமென்று மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்ஹ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
