சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்பாடுகள் பற்றி துறைசார் நிபுணர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்

சர்வதேச நாணய நிதியத்துடனான எதிர்காலச் செயற்பாடுகள் மற்றும் நாடு முகம்கொடுக்கும் சவால்கள் என்பனவற்றை வெற்றிகொள்வது பற்றி நிதித்துறை ஆலோசகர்களுடன் விரிவான முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, கலாநிதி ஷாந்தா தேவராஜன், கலாநிதி ஷேர்மினி குரே ஆகியோருடன் இதுபற்றிக் கலந்துரையாடியதாக ஜனாதிபதியின் ருவிட்டர் சமூக வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
