சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றி அளித்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்

சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றி அளித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையை பயனுள்ளதாக நிறைவு செய்வதற்கு முடிந்தமை மகிழ்ச்சி அளிப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்திய பிரதமர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் பல இணக்கப்பாடுகளை எட்டக்கூடியதாக இருந்தது. அதன்படி, நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு முன்னெடுக்கப்படும் வழிமுறைகள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இதேவேளை, எதிர்வரும் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தமது உரையின் போது குறிப்பிட்டார்.
