சர்வதேச பல்கலைக்கழகத்தின் கிளையை விரைவில் இலங்கையில் நிறுவ குழு அமைப்பு

சர்வதேச பல்கலைக்கழகத்தின் கிளையொன்றை நாட்டில் ஸ்தாபிப்பது தொடர்பிலான அறிக்கையை தயாரித்து குறுகிய காலத்திற்குள் அது தொடர்பான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமரப்பிக்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். கல்வியமைச்சர் சுசில் பிறேம ஜயந்தவிற்கு ஜனாதிபதி இது தொடர்பில் பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்கிறார்கள். இதனால், மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அந்நியச் செலாவணியை நாடு இழப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச பல்கலைக்கழகங்களை இலங்கையில் அமைப்பதன் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு மாணவர்களை கூடுதலாக கவர்ந்திழுத்து, வெளிநாட்டு முதலீடுகளையும் பெற்றுக் கொள்ள முடியும் என்று அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.
