சர்வதேச ரீதியிலான வர்த்தக உடன்படிக்கைகளை எற்படுத்துவது பற்றி அரசாங்கம் கவனம் செலுதத்pயுள்ளது

சர்வதேச ரீதியிலான வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தவுள்ளது. அந்நியச் செலவானி நெருக்கடிக்கு தீர்வாக இந்த நடிவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் பந்துல குனவாத்தன தெரிவித்தார். உலகளாவிய தேவைகளுக்கமைவாக இவ்வாறான உடன்படிக்கைகளை ஏற்படுத்துவது நாட்டிற்கு பயனுள்ளதாக அமையும். இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு ஐரோப்பிய வர்த்தக சந்தையில் சந்தர்ப்பங்களை விரிவு படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடல் உணவுகள், ஆடை ஏற்றுமதித் துறைகள் பற்றியும் மிகுந்;த அவதானம் செலுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் பந்துல குனவர்த்தன தெரிவித்தார்.
