மன்னாரில் இருந்து இன்று சற்று முன்னர் 7 பேர் தமிழ் நாட்டின் தனுஸ்கோடியை அண்டியுள்ள தீடையை சென்றடைந்துள்ளனர்.
இலங்கையில் நிலவும் அதிக நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து தொடர்ந்தும் பலர் தமிழ் நாட்டிற்கு அகதிகளாகச் செல்லும் நிலைமயில் இன்றும் 7 பேர் அகதிகளாகச் சென்றடைந்துள்ளனர்.
இவ்வாறு சென்றடைந்த அகதிகளை இந்திய கரையோர காவல்படையினர் மீட்டு மரையன் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பொலிசாரின் விசாரணைகளின் பின்னர் அகதிகள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படவுள்ளனர்.
TL