கடந்த காலங்களில் எதிர்கொண்ட சவால்களை வெற்றி கொண்டு சர்வதேசத்துடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த முடியும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். மக்கள,; அரசாங்கம் மீது கொண்டுள்ள நம்பிக்கையினை நிறைவேற்ற இயலும் என்றும் அவர் கூறினார். குருணாகலில் அரச அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சவர்ர்த்தையின் போதே பிரதமர் இந்த விடயததை தெரிவித்தார். உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கினை மேம்படுத்துவதற்காக அரச அதிகாரிகளை தெளிவு படுத்த இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நெருக்கடிக்கு மத்தியில் அரச அதிகாரிகள் போராட்டங்களை மேற்கொண்ட போதும் அவர்களின் தொழில்களை இல்லாது செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வில்லை என்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன கூறினார்.