ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, சவுதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளத் தயாராகி வருகிறார். சவுதி அரேபிய மன்னரின் அழைப்பை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக ஈரானின் முதலாவது துணை ஜனாதிபதி முகமது மொக்பார் உறுதிப்படுத்தியுள்ளார். சவூதி அரேபியாவுக்கும், ஈரானுக்கும் இடையிலான தூதரக உறவுகளை மீண்டும் ஆரம்பிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகின்றன. ஈரானில் உள்ள சவூதி தூதரக அதிகாரிகள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக, சவூதி அரேபியா 2016ஆம் ஆண்டில் ஈரானுடனான தூதரக உறவுகளை துண்டித்தமை குறிப்பிடத்தக்கது.