Home » சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிப் பகுதியில்

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிப் பகுதியில்

Source
Share Button

2021 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிப்பகுதியில் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். 2022 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை திருத்துவதற்கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வழக்கப்பட்டிருந்த காலம் மேலும் நீடிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றுடன் இதற்கான விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சை கடமைகளுக்காக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு செலுத்த வேண்டியிருந்த 600 மில்லியன் ரூபா நிலுவைப் பணத்தை செலுத்தி முடிக்கும் வரை உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது. பெரும்பாலும் இந்தத் தொகை திறைசேரியின் ஊடாக எதிர்வரும் இரண்டு வாரங்களில் செலுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image