கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. பரீட்சைக்கான வினாப்பத்திரங்களை பொதி செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். மழையுடன் கூடிய காலநிலையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களிலிருந்து மாணவர்களை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் எமது நிலையத்திற்குத் தெரிவித்தார்.