இலங்கையில், சினிமாத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பத்தையும் அதுபற்றிய அறிவையும் வழங்கும் புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, இந்திய சினிமாத்துறை தொடர்பான உயர்கல்வி நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் பதிய நிறுவனம் ஒன்றை ஸ்தாபிக்க உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இந்திய – கன்னட திரைப்பட விழாவின் அங்குரார்ப்பன நிகழ்வு இன்று தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்றபோதே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார். இலங்கையின் சினிமாவை சர்வதேச ரீதிpயில் பிரபல்யப்படுத்துவதற்காக இவ்வாறான புதிய அனுபவங்களை பரிமாறிக்கொள்வது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லெ, தேசிய திரைப்பட கூட்டத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி தீபால் சந்திரரத்ன உள்ளிட்டோரும் நிகழ்வில் பங்கேற்றனர். தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம், இந்திய உயர்ஸ்தானிகராலயம், சுவாமி விவேகானந்த – இந்திய கலாசார மத்திய நிலையம், பெங்களுரிலுள்ள நகாதிலி திரைப்படக் கல்லூரி, பென் ஸ்ரீலங்கா நிறுவனம், ஆசிய ஊடகம் மறறும்; கலாசார சங்கம் என்பன இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.