சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்கள் மற்றும் சிறு தேயிலை செய்கையாளர்களின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு கடன் பத்திரங்கள் ஆரம்பிப்பதற்கு உதவும் வகையில் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் SDB வங்கி கைகோர்ப்பு

இலங்கையின் தெரிவு செய்யப்பட்ட சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் பத்திரங்களை (LoC) ஆரம்பித்துக் கொள்ள உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் SDB வங்கி அண்மையில் கைகோர்த்திருந்தது. இதில், பெண்களினால் முன்னெடுக்கப்படும் வியாபாரங்கள், முதன் முறையாக கடன் பெறுவோர், போதியளவு பிணையங்களைக் கொண்டிருக்காதவர்கள் மற்றும் கொழும்புக்கு அப்பால் வசிப்போர் என பலரும் அடங்கியிருந்தனர். சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கு புத்தாக்கமான நிதித் திட்டங்களை கட்டியெழுப்புவதற்கு தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகள், ஏற்றுமதிசார் துறை விருத்தி மற்றும் இலங்கையில் பெண் தொழில்முயற்சியாண்மை சூழல் கட்டமைப்பை கட்டியெழுப்புவது போன்றன இந்தத் திட்டத்தில் அடங்கியிருந்தன.
இந்த கடன் வசதிக்கு விண்ணப்பிப்பதற்கு சகல சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கும் ஆதரவளிக்கப்படுவதுடன், விவசாய பதப்படுத்தல், உற்பத்தி, கடற்றொழில், சுற்றுலா, விலங்கு வேலாண்மை மற்றும் ஏற்றுமதி சார் வியாபாரங்கள் போன்றவற்றில் வர்த்தகம், குத்தகை மற்றும் வியாபாரங்களை வாடகைக்கு வழங்குவது போன்ற தவிர்க்கப்பட்டு, முதன் முறையாக கடன் பெறுவோர், பெண் தலைமை வியாபாரங்கள், தொழிற்படு பிணைய மூலதன வசதி இல்லாத வியாபார உரிமையாளர்கள் மற்றும் கொழும்பு மாவட்டத்துக்கு அப்பால் வசிக்கும் சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட கடன் ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய பயிரிடல் மற்றும் மீள் பயிரிடல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் சிறு தேயிலை செய்கையாளர்களுக்கு மீள் கடன் வழங்கல் திட்டம் முன்னெடுக்கப்படுவதுடன், தேயிலை தொழிற்துறையின் நிலைபேறாண்மையை மேம்படுத்துவதற்கு உரிய திட்டமாகவும் அமைந்துள்ளது. கடன் திட்டத்தினூடாக சகல விதமான திட்டங்களுக்கும் அவசியமான மூலதன முதலீடுகள் வழங்கப்படும் என்பதுடன், பயிரிடல், நிரப்பல், கன்றுகள் வளர்ப்பு, நீர்ப்பாசனம், நீர் மற்றும் மண் வள முகாமைத்துவம் போன்ற நடவடிக்கைகளினூடாக தேயிலை உற்பத்தி அதிகரிப்புக்கு மூலதன முதலீடுகள் உதவியாக அமைந்திருக்கும். பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு வலுவூட்டலுடன், நாட்டின் டிஜிட்டல் உள்ளடக்கத்துக்கு வசதியளித்தல் மற்றும் நிதி மற்றும் சூழல்சார் நிலைபேறாண்மையை கட்டியெழுப்பல் போன்றன தொடர்பில் அதிகளவு அக்கறை கொண்டுள்ள SDB வங்கி, எதிர்வரும் மாதங்களில் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து இந்த சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு பங்களிப்பு செலுத்துவதுடன், இலங்கையின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு பங்களிப்பு வழங்குவதாக அமைந்திருக்கும்.
