Home » சிறுபோக நெற்செய்கைக்குத் தேவையான 36 ஆயிரம் மெற்றிக் தொன் உரம் – சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் இணக்கம்

சிறுபோக நெற்செய்கைக்குத் தேவையான 36 ஆயிரம் மெற்றிக் தொன் உரம் – சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் இணக்கம்

Source
Share Button

சிறுபோக நெற்செய்கைக்குத் தேவையான 36 ஆயிரம் மெற்றிக் தொன் உரத்தை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த பருவத்துக்கான உரத்தைப் பெறுவது கடினமான பணியாக இருந்ததாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உர ஏற்றுமதியை உக்ரைன் நிறுத்தியுள்ளமையே இதற்கான காரணமாகும்.
நெல், சோள விளைச்சலுக்கும் தேவையான யூரியா உரம் உள்ளிட்டவற்றை அரசாங்கத்தால் வழங்க முடிந்தது. இதேவேளை, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் மற்றும் துஐஊயு ஆகியவற்றின் உதவியின் கீழ் பிரதான பருவப் பயிர்ச்செய்கைக்குத் தேவையான 144 மெற்றிக் தொன் சோள விதைகள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
நாட்டின் சோள உற்பத்தியைப் பாதுகாப்பதற்காகவும், அதன் மூலம் முட்டைகளை உற்பத்தி செய்யவும் கோழி இறைச்சியின் சில்லறை விலையை குறைப்பதும் இதன் நோக்கம்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image