சிறுபோக நெற்செய்கைக்குத் தேவையான சேற்று உரத்தை சகல விவசாயிகளுக்கும் போதியளவில் இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த வகைச் சேர்ந்த 36 ஆயிரம் மெற்றிக் தொன் உரத்தை ஏற்றிய கப்பல் அடுத்த மாதம் 20ஆம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது. எகிப்தில் இருந்து தருவிக்கப்படும் உர வகைகள் அவை கிடைத்தவுடன் சிறுபோக நெற்செய்கைக்காகன விநியோகிக்கப்படும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த மாத இறுதிக்குள் பல்வேறு பகுதிகளிலும் நெற்செய்கை ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. இதனைக் கருத்திற்கொண்டு தனியார் துறையிடம் காணப்படும் 3 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் உரத்தைக் கொள்வனவு செய்து, அதனை விவசாயிகளுக்கென இலவசமாக வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
நாட்டில் இந்த ஆண்டில் எந்தவிதத்திலும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படமாட்டாது என்று அமைச்சல் மஹிந்த அமரவீர வலியுறுத்தினார்.