சிறுவர்களுக்கிடையே ஒருவகை கண் நோய் பரவி வருவதாக, கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விஷேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இது குறித்து பெற்றோர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியிருக்கிறார். கண் சிவப்பாதல், கண்ணிலிருந்து நீர் வடிதல், கண்ணில் அரிப்பு ஏற்படல் மற்றும் இருமலுடன் கூடிய தடிமன் போன்றன இதன் அறிகுறிகளாகும்.