திருநெல்வேலியிலுள்ள சிறுவர் இல்லத்திலிருந்து கடந்த 27ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ள இரண்டு சிறுவர்களையும் கண்டுபிடிப்பதற்கு கோப்பாய் பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் கடிதம் அனுப்பியுள்ளார்.
திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்க சைவச் சிறுவர் இல்லத்திலிருந்த இரண்டு சிறுவர்களை கடந்த மாதம் 27ஆம் திகதி முதல் காணவில்லை எனவும் இன்றுவரையில் அவர்கள் எங்குள்ளார்கள் என்பது தெரியவில்லை என்றும் ‘உதயன் பத்திரிகையில்’ நேற்றுச் செய்தி வெளியாகியிருந்தது.
பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது சொந்தப்பிரேரணையாக எடுத்து கோப்பாய் பொலிஸாருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அந்தக் கடிதத்தில், காணாமல்போன சிறுவர்களை இதுவரை கண்டுபிடிக்க முடியாமைக்கான காரணத்தையும், அவர்களைக் கண்டுபிடிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதையும் நாளை திங்கட் கிழமைக்குள் தெரியப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
TL