சிறுவர் அபிவிருத்தி மத்திய நிலையங்களுக்கான தேசிய வழிகாட்டுதல்கள் மற்றும் குறைந்தபட்ச தரநிலைகள் அறிமுகம்

இலங்கையில் உள்ள சிறுவர் அபிவிருத்தி மத்திய நிலையங்களுக்கு தேசிய வழிகாட்டுதல்கள் மற்றும் குறைந்தபட்ச தர நிலைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில், சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கீகாரம் வழங்கியுள்ளார்.
தரமான சேவைகளை சிறுவர்களுக்கு வழங்குவதற்காக, சிறுவர் அபிவிருத்தி மத்திய நிலையங்களுக்கு மாகாண மட்டங்களில் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் ஏற்கனவே செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், தேசிய மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிகாட்டுதல்களில் குறைபாடு காணப்படுகிறது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டுதல்களை, நாடு பூராகவும் உள்ள அனைத்து சிறுவர் அபிவிருத்தி மத்திய நிலையங்களையும் உள்ளடக்கிய வகையில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சிறுவர் பராமரிப்புத் துறையுடன் தொடர்புடைய அனைத்து பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், உரிய நிபுணர்களின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், இந்த தேசிய வழிகாட்டுதல்கள் மற்றும் குறைந்தபட்ச தரநிலைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
