Home » சிறுவர் பாதுகாப்பிற்காக புதிய சட்டம்

சிறுவர் பாதுகாப்பிற்காக புதிய சட்டம்

Source
Share Button

சிறுவர் பாதுகாப்பு மற்றும் பொறுப்புத் தொடர்பான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சமவாயத்தில் 18 வயதுக்குக் குறைவான எந்தவொரு பிள்ளையும் சிறுவர் என அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த சமவாயத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய சிறுவர்கள் தொடர்பான ஏற்பாடுகளை உட்சேர்த்து சிறுவர்கள் மற்றும் இளையவர் தொடர்பான கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறித்த தீர்மானத்திற்கமைய சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் இது தொடர்பான முன்மொழிவு அமைச்சரவைக்குச் சமரப்பிக்கப்பட்டது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image