Home » சிறுவர் மந்தபோஷண பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது

சிறுவர் மந்தபோஷண பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது

Source
Share Button

சிறுவர் மந்தபோஷண நிலையை தவிர்ப்பது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் திரிபோஷவின் தரம் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார். இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே அமைச்சர் இந்த விடயங்களை தெரிவித்தார். திரிபோஷவுக்கு பயன்படுத்தப்படும் சோள உற்பத்தி குறைவடைந்ததனால், திரிபோஷ இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதில் அடங்கியிருக்கும் எப்லடொக்சின் பதார்த்தத்தில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படுவதற்கு நேரிடலாம் என்றும் அவர் கூறினார். இந்தப் பிரச்சினை ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்டது. சுகாதார விடயங்கள் சம்பந்தமாக ஏதாவது பிரச்சினைகள் இருக்குமாயின், அதுபற்றி எந்தத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயார் என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே வினவிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவில் மின்கட்டணம் அதிகரித்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். மின்சார சபையினை

சமயத் தலங்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்கள் மின்கட்டண அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையினை விஸ்தரிப்பது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர விவாதத்தின் போது கூறினார். பாடசாலைகள், வைத்தியசாலைகள் உட்பட மேலும் சில நிறுவனங்களின் கட்டடங்களின் கூரைகளில் சூரிசக்தி மின் உற்பத்திக் கட்டமைப்பு பொருத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image