சர்வதேச சுகாதார பராமரிப்புக்காக, கொரிய அறக்கட்டளை 223 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளது. இலங்கைக்கான கொரியத் தூதுவர் மற்றும் கொரியா அறக்கட்டளையின் தலைவர் ஆகியோர் அண்மையில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் இந்த நன்கொடையை கையளித்தனர்.
மருத்துவமனை அறுவை சிகிச்சை உபகரணங்கள், தீவிர சிகிச்சை பிரிவுகள், ஆய்வு கூடங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் பல்வேறு கருவிகள் என்பன கையளிக்கப்பட்டுள்ளன. இந்த உபகரணங்கள் சுகாதார அமைச்சினால், பயோமெடிக்கல் இன்ஜினியரிங் சேவைப் பிரிவுக்கு வழங்கப்பட்டன.