சில அரசியல் குழுக்களின் வேலைநிறுத்தத்தினால் நாடு மேலும் சிரமத்திற்கு உள்ளாவதாக ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். உரிமைகளை வென்றெடுப்பதற்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அதிகாரம் தொழிற்சங்கங்களுக்குக் காணப்படுகின்றது. ஆனால், நாடு சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ள வேளையில், தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமா… என்பது பற்றி சிந்தித்துச் செயற்பட வேண்டும் என்று சமன் ரத்னபிரிய வலியுறுத்தினார்.