சிவனொளிபாத யாத்திரை இன்று ஆரம்பம்
சிவனொளிபாதமலைக்கான வருடாந்த யாத்திரைக் காலம் இன்று ஆரம்பமாகின்றது. இன்று ஆரம்பமாகும் யாத்திரை அடுத்த வருடம் இடம்பெறும் வெசாக் போயா தினம் வரை இடம்பெறும். ஸ்ரீபாதஸ்தானாதிபதி, சப்ரகமுவ பிரதம சங்கநாயக்க மற்றும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் வேந்தர் சங்கைக்குரிய பெங்கமுவே ஸ்ரீ தம்மதின்ன தேரரின் வழிகாட்டலின் கீழ் வருடாந்த யாத்திரை காலத்துடன் தொடர்புடைய அனைத்து பாரம்பரிய, சம்பிரதாயங்கள் மற்றும் சடங்குகள் மேற்கொள்ளப்படும் என புத்தசாசன அமைச்சுத் தெரிவித்துள்ளது.
இதனிடையே, முறையற்ற விதத்தில் குப்பைகளை வீசிச் செல்லும் சிவனொளிபாத யாத்திரையில் ஈடுபடும் யாத்திரிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
அதற்கான விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவின் பிரதிப் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.
சிவனொளிபாத யாத்திரை காலங்களில் பிரதேசத்தில் ஏற்படும் சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டார்.
இந்த வருடம் சிவனொளிபாத யாத்திரை இன்று பௌர்ணமி தினத்திலிருந்து ஆரம்பமாகி அடுத்த மாதம்; வெசாக் பௌர்ணமி வரை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.