சீதாவக்க ஒடிசி என்ற ரெயிலுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளதாக ரெயில்வேத் திணைக்களம் அறிவித்துள்ளது. வார இறுதி நாட்களில் சேவையில் ஈடுபடுத்தப்படும் இந்த ரெயிலில் பயணிக்க அதிகளவிலானோர் ஆர்வம் காட்டி வருகின்றார்கள். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த ரெயிலில் பயணிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இலத்திரனியல் டிக்கட்டுக்கள் ஏற்கனவே முற்றாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. சீதாவக்க ஒடிசி என்ற ரெயிலில் பயணிக்க உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் ஆர்வம்காட்டி வருகின்றார்கள்.