Home » சீனாவின் சியான் 06 இலங்கை நோக்கி நகர்கின்றது.

சீனாவின் சியான் 06 இலங்கை நோக்கி நகர்கின்றது.

Source
ந.லோகதயாளன். இந்தியாவை இலக்கு வைத்து இலங்கை கடற்பகுதிக்குள் சீனாவின் அதி நவீன கப்பல்கள் நுழைவது அதிகரித்துச் செல்வது தொடர்பில் இந்தியாவும் தனது கருசணையை செலுத்தி வருகின்றது. கடந்த வாரம் இலங்கை கடலிற்குள் புகுந்த சீனாவின் அதிநவீன கண்காணிப்பு வசதிகளுடன் கூடிய  போர்க்கப்பல்  கொழும்பு துறைமுகத்தில் தரிந்தது ஏன் என இந்தியா ஆராய்கின்றது. இதேபோன்று சீனாவின் யுவான் வாங்-5’, செயற்கைக்கோள் தொழில்நுட்பத்துடன் கண்காணிக்கும் திறன் கொண்ட போர்க்கப்பல் 2022ஆம்  ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கையை வந்தடைந்தது. இவ்வாறு யுவான் வாங் 05 கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை வந்தடைந்தாலும் யுவான் வாங் 05 வருவதான செய்தி 2022ஆம. ஆண்டு  யூலை இறுதிப் பகுதியில் இருந்தே பிரஸ்தாபிக்கப்பட்டுவந்தது. இதனால் பல திசைகளிலும. கண்காணிக்கப்பட்டதோடு இலங்கையின் மாத்தறையை அண்டிய கடற்பகுதியில் இந்தியாவின் ஓர் அதி நவீண வசதிகொண்ட கப்பல் யுவான் வாங் 05ஐ கண்காணிப்பில் ஈடுபட்டதாகவும் அப்போது செய்தி வந்தன. இந்த நிலையில் சரியாக ஓராண்டுக்குப் பிறகு சீனாவின் இரண்டாவது  கப்பல் இலங்கைக்கு வந்திருப்பது இந்தியாவைக் கவலையடையச் செய்துள்ளதா என்றால் அது இல்லை என்றே தெரிகின்றது ஏனெனில் தற்போது வந்து சென்ற கப்பல் யுத்தக் கப்பலாக இருப்பினும் அதன் வல்லமையை இந்தியா எடைபோட்டுக்கொண்டது அதனால் தமக்கான பாதுகாப்பு உறுதியானது என நம்பினர். இருப்பினும் கடந்த ஆண்டு வந்த கப்பலே இந்த யுத்தக் கப்பலைவிட ஆபத்தானது என இந்திய முன் ஆயத்தமாக எச்சரிக்கைகொண்டது. ஏனெனில் சீனாவின் சந்தேகத்திற்குரிய விண்வெளி ஆய்வுக் கப்பலில், இந்தியாவின் முக்கியமான இராணுவ நிலைகளை உளவு பார்க்க வாய்ப்பு உள்ளதால், அந்தக் கப்பல் வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எனினும் அப்போது  எதிர்ப்பையும் மீறி இலங்கை  அனுமதி வழங்கியதன் பின்னர் இந்த மாதம்  மீண்டும் அதிநவீன கண்காணிப்பு வசதிகளுடன் கூடிய சீன போர்க்கப்பலான ‘ஹாய் யாங் 24 ஹாவ்’ இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்து திரும்பிச் சென்றுள்ளதான காலத்தில்  இந்த கப்பலின் வருகை குறித்து இந்திய அதிகாரிகளிடம் சீனா தெரிவித்தபோதும், அதன் வருகை குறித்து இந்திய தரப்பில் ஓர் கவலை தெரிவிக்கப்பட்டது. எனினும் அந்தக் கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கியது. அந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து ஓகஸ்ட் 12ஆம் திகதி   புறப்பட்டுச் சென்றது. இந்தப்  போர்க்கப்பல் வருவதற்கும் சீன அதிகாரிகள் இலங்கையிடம் முன்கூட்டியே அனுமதி கோரியிருந்த சமயம்  இந்தியத் தரப்பினால் வெளிப்படுத்தப்பட்ட கவலைகள் காரணமாக சீனாவின் போர்க் கப்பலுக்கு அனுமதி வழங்குவதில் இலங்கை தாமதம் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சூழ்நிலையிலேயே 3வது மிகப்பெரிய கப்பலும் சீனாவில் இருந்து வலுகை தரவுள்ளதான தகவல் இலங்கைத் த்ப்பில் இருந்து இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. “சியான் 06” எனப்படும் 3,999 தொன் எடை கொண்ட இந்த ஆராச்சிக் கப்பல் ஒகடோபர் மாதம் இலங்கையின் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களில் தரித்து நின்று ஆராச்சியில் ஈடுபடவுள்ளதாகவே இந்தியத் தரப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சியான் 06 குவாங்சோவை தளமாக கொண்டு செயற்படும. ராட்சத கப்பல் தற்போது தென் சீனக் கடலில் இருந்து நகர ஆரம்பித்துவிட்டது. இலங்கையை அடையும் இக் கப்பலானது இலங்கையின் தேசிய நீர்வள ஆராச்சி மற்றும் அபிவருத்தி முகவரான நாராவின் ஆராச்சியிலும், தென் இந்திய பெருங்கடலையும் ஆய்வு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக  இந்தியா இப்பகுதியில் உள்ள  தனது கடற்படையின் கண்காணிப்பு கப்பலை உசார் செய்வதோடு மேலும் இரு கப்பலை ஒக்டோபர் மாத்த்திற்கு முன்னர் இப் பகுதிக்கு கொண்டுவர திட்டமிடுவதனால் எதிர் வரும் மாரி மழை கலத்தில் கடல் கொத்தளிப்பான காலத்திலும் கடலில் பெரும் பதற்றமும் சூழுவதாகவே இருப்பதோடு இலங்கையின் முற்கூட்டிய தகவல் கசிவும் ஆராயப்படுகின்றது.
What’s your Reaction?
1
1
1
0
0
1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image