Home » சீனா ஐயாயிரம் மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு வழங்கியது

சீனா ஐயாயிரம் மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு வழங்கியது

Source
Share Button

சீனா அன்பளிப்புச் செய்த ஐயாயிரம் மெற்றிக் தொன் அரிசி நேற்று நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதிநிதிகள் இந்த அரிசியை உத்தியோகபூர்வமாக இலங்கை அரசாங்கத்திடம் கையளித்துள்ளனர். நாடு என்ற வகையில் இலங்கை முகம்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு சீன அரசாங்கம் வழங்கும் ஒத்துழைப்பிற்கு பாராட்டுத் தெரிவிப்பதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன இதன்போது தெரிவித்தார். இந்த அரிசித் தொகை பாடசாலை மாணவர்களின் உணவிற்கான வேலைத்திட்டத்திற்குப் பயன்படுத்தப்படவுள்ளது. இலங்கை முகம்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்கு தன்னாலான சகல ஒத்துழைப்பையும் வழங்கத் தயார் என, சீன அரசாங்கத்தின் சார்பில் இந்நிகழ்வில் பங்கேற்ற இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் கோ இதன் போது தெரிவித்தார்.
சீன – இலங்கை றபர், அரிசி ஒப்பந்தத்தின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி அமைச்சர் பந்துல குணவர்த்தன சீன அரசாங்கத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கு அமைய இந்த அரிசித் தொகை இலங்கைக்கு கிடைத்துள்ளது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image