சீன அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ள 08 மாடிகளைக் கொண்ட வோட் தொகுதி நேற்று சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ சேன் ஹோன், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட பலரும் இதில் கலந்துகொண்டார்கள்;. இதுதொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய ஆவணங்களும் இதன்போது பரிமாறப்பட்டன.