Home » சீன அரசாங்க நிவாரணத்தின் கீழ், 10.6 மில்லியன் லீற்றர் எரிபொருள்

சீன அரசாங்க நிவாரணத்தின் கீழ், 10.6 மில்லியன் லீற்றர் எரிபொருள்

Source
Share Button

சீன அரசாங்கத்தின் நிவாரணத்தின் கீழ், விவசாயம் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக 10.6 மில்லியன் லீற்றர் எரிபொருளை இலங்கைக்கு வழங்கவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த எரிபொருள் தொகை வழங்கப்படவுள்ளது. அதில் 7.5 மில்லியன் லீற்றர் எரிபொருள் விவசாய நோக்கங்களுக்காக ஒதுக்கப்படும். இந்த எரிபொருள் தொகை அடுத்த மாதம் நாட்டை வந்தடையவுள்ளது. அறுவடையின் போது அவை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நன்கொடையாக பெறப்படும் இந்த எரிபொருள், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது. பெரும்போகத்திற்கான நெல் அறுவடை நாடு முழுவதும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image