சீனக்கடலட்டை வேண்டாம், இலங்கை உற்பத்தியே வேண்டும் என பாசையூர் கடற்றொழில் கூட்டுறவு சங்கத்தின் கடற்றொழிலாளர்கள் கடலில் இறங்கிப் போராட்டம்.
கிளிநொச்சி, பூநகரி, கந்தலடி கடற்பிரதேசத்திலே கடல் விஜயத்தினை மேற்கொண்டு கடலட்டை பிடிப்பினை கண்டித்து, கவனயீர்ப்பு வாழ்வாதார போராட்டம் ஒன்றை பாசையூர் கடற்றொழில் கூட்டுறவு சங்கத்தின் கடற்றொழிலாளர்கள் படகில் முன்னெடுத்தனர்.
இது தொடர்பாக பாசையூர் கடற்றொழில் கூட்டுறவு சங்கத்தின் கடற்றொழிலாளர்கள் ஊடகங்களிடம் மேலும் விபரம் தெரிவிக்கிகையில்,
கடந்த மூன்று தலைமுறைகளாக பாரம்பாரிய சிறகுவலைகளை எமது மீனவரகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் நாரா நிறுவனம் கடலினை சீன கடலட்டை வளர்ப்புக்கு GCF மூலமாக அளவீடு செய்து தடி மூலமாக அடையாளப்படுத்துகின்றனர்.
பாரம்பரியமாக பல ஆண்டுகளாக சிறகுவலை தொழிலை மேற்கொண்டு வரும் தொழிலாளர்களுடன் எந்தொரு கலந்துறையாடலினையும் முன்னெடுக்காமலேயே நாரா நிறுவனம் இதனை சர்வாதிகராமாக தமது வழமையான அதிகார போக்கில் கடல் ஆய்வுகளை மேற்கொள்ளுகின்றனர்.
இது இயற்கையாகவே கடலட்டை வளரும் பிரதேசமாக காணப்படுகின்றது. இதேநேரம் இப்பகுதியில்
இதுவரை தொழில் புரிந்த 100சிறகுவலை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனை எவரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை. பூநகரி பிரதேசத்தினை சேர்ந்தாலும் குருநகர் பாசையூர் சேர்ந்த மீனவர்கள் தான் இதன் காரணமாக பாதிப்பினை சந்திக்கின்றனர்.
யாழ்ப்பாணம் மீனவர்களையும் வன்னி பெரும் நிலப்பரப்பில் இருக்கின்ற எமது மீனவர்களிடையில் ஒரு முரண்பாட்டினை மேற்கொள்ளுவதற்காகதான் இந்த நாரா நிறுவனம் செயற்பட்டு வருகின்றது என நாம் நம்புகின்றோம் என்றனர்.
பாசையூர் கடற்றொழிலாளர் சங்கத்தின் உப செயலாளர் என்.நிவாஸ், தலைவர் மதன், ,உறுப்பினர் விஜித், யாழ் மாவட்ட முன்னாள் கடற்றொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவரும் ஊர்காவற்துறை கடற்றொழிலாளர் சங்கத்தின் தற்போதைய தலைவருமான அ.அன்னராசா உள்ளிட்ட கடற்றொழிலாளர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
TL