சீன வெளிவிவகார அமைச்சர் கின் கென்ங், நாளை இந்தியாவுக்கான விஜயத்தை ஆரம்பிக்கவுள்ளார். நாளை மற்றும் நாளை மறுநாள் கோவாவில் நடைபெறும் ஷங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவுள்ளார். சீனா, இந்தியா, கஸகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்த ஆண்டு இதற்கு இந்தியா தலைமை தாங்குகிறது. இந்த விஜயத்தின் பின்னர், சீன அமைச்சர் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.